இன்று முதல் வங்கிகள் வழக்கம் போல் முழுமையாக செயல்படும்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக, ஊரடங்கு உத்தரவு கடந்த 24.03.2020 முதல் உள்ளதையடுத்து மக்கள் கூடும் இடங்களில்கூட்ட நெரிசலைத் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனால் வங்கிகளில் பரிவர்த்தனை நேரம் காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் வங்கிகள் பழையபடி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் காலை 10 மணி முதல் மாலை4 மணி வரை செயல்படும் எனவும் மேலும்,வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் வங்கியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும் என வங்கிகள் அறிவித்துள்ளன.
Tags: முக்கிய அறிவிப்பு
