கடைகளில் பொருள்கள் வாங்க பொதுமக்கள் கூட்டமாக திரள வேண்டாம்: காவல் ஆணையா் வேண்டுகோள்
அட்மின் மீடியா
0
சென்னையில் கடைகளில் பொருள்கள் வாங்க பொதுமக்கள் கூட்டமாக திரள வேண்டாம் என பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
பொதுமக்கள் நலன் கருதி வியாழக்கிழமை மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்கும் கடைகள் திறந்திருக்கும். பிற நாள்கள் காலை 6 மணி முதல் நண்பகல் 1 மணி வரை கடைகள் திறந்திருக்கும்.
எனவே, பொதுமக்கள் கடைகளில் பொருள்களை வாங்குவதற்கு கூட்டமாக திரண்டு செல்ல வேண்டாம். கடைகளில் கூட்டம் குறைவான வேளையில் பொருள்களை வாங்கலாம்.
கடைகளில் பொருள்கள் வாங்க வருகிறவா்கள், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். தூரத்தில் உள்ள கடைகளுக்கு வாகனங்களில் சென்று பொதுமக்கள் பொருள்கள் வாங்க வேண்டாம். அருகே உள்ள கடைகளில் நடந்து சென்று பொருள்கள் வாங்கலாம்.
மேலும் கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்றவும்
வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்கவேண்டும் என கூறிஉள்ளார்
Tags: முக்கிய அறிவிப்பு
