Breaking News

சவுதி அரேபியாவில் சாட்டையடி தண்டனை இனி இல்லை

அட்மின் மீடியா
6
சவுதி அரேபியாவில் இனி சாட்டை அடி  தண்டனை வழங்கக்கூடாது என அந்நாட்டு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.சவுதி அரேபியாவில், பல்வேறு குற்றங்களுக்கு, சாட்டை மற்றும் பிரம்பால் அடிக்கும் தண்டனை வழங்கப்பட்டு வந்தது. 




தற்போது அதற்க்கு பதிலாக சிறை அல்லது அபராதம் விதிக்கலாம் என்று சவுதி அரேபிய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. 

சவுதி  அரேபிய அரசர் சல்மான் மற்றும் நாட்டின் நடைமுறை ஆட்சியாளராக இருக்கும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் மேற்கொள்ளும்  மனித உரிமைகளை நிலைநாட்டும் ஓர் அங்கமாக  இந்த தண்டனை ஒழிப்பு நடவடிக்கை பார்க்கபடுகின்றது

source:
https://www.aljazeera.com/news/2020/04/saudi-arabia-abolishes-flogging-punishment-supreme-court-200425103319396.html

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

6 Comments