கொரானா அறிகுறியா ? சென்னை மாநகராட்சி ஆப் அறிமுகம்.
அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி நிர்வாகம் GCC CORONA Monitoring என்ற புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்த GCC CORONA Monitoring செயலியை பயன்படுத்துவது எப்படி?
- முதலில் ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் https://play.google.com/store/apps/details?id=com.gcc.smartcity இந்த லின்ங்க் கிளிக் செய்து ஆப்பை டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்.
- அந்த ஆப்பில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்து, உங்கள் மொபைலுக்கு வரும் OTP-யை பதிவு செய்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
- இந்தச் செயலியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும், சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் கொண்டவர்களுக்கும் தனித்தனி பகுதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்
- உங்களுக்கு காய்ச்சல் இருக்கிறது என்றால் அதற்குரிய பகுதியில் ஒரு புகைப்படம் எடுத்து அப்லோடு செய்தால் போதும் நமது இருப்பிடம் பற்றிய தகவல்கள் அவர்களுக்கு கிடைக்கப்பெறும்.
- உங்களை உடனடியாக மருத்துவர்கள் தொடர்புகொண்டு பேசுவார்கள். கொரோனா இருப்பதாக மருத்துவர்கள் உணர்ந்தால், அந்தப் பகுதிக்கே மருத்துவக் குழுவை அனுப்பி பரிசோதனை செய்வார்கள்.
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் அனைவரும் இந்த செயலியைப் பயன்படுத்தி, மருத்துவ அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று அரசுக்கு ஒத்துழப்பு வழங்கவேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Tags: முக்கிய செய்தி