Breaking News

தமிழகத்தில் பிறை பார்க்கப்பட்டது : ஜமா அத்துல் உலமா அறிவிப்பு

அட்மின் மீடியா
0
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையான ரமலான் நோன்பு  நாளை முதல் ஆரம்பம்......




ரமலான் மாதத்தின் முதல் பிறை  தமிழகத்தில்     இன்று பல்வேறு இடங்களில் காணப்பட்டது . இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 24  ஆம் தேதி இன்று முதல் தராவீஹ் தொழுகையுடன்  ரமலான் நோன்பு தொடங்குகிறது என்று அரசு  தலைமை காஜி அறிவித்துள்ளார்கள்  என  ஜமாஅத்துல் உலமா சபை அறிவிப்பு


இந்த ஆண்டு கொரானாவினால் வரலாற்றில் முதல்முறையாக ஊரடங்கு முடியும் வரை ரமலான் தொழுகை, ரமலான் நோன்பு கஞ்சி,மற்றும் தராவிஹ் தொழுகை, என அனைத்தும் அவரவர் வீடுகளிலேயே மேற்கொள்ள வேண்டும் என்றும் யாரும் விதிமுறைகளை மீற வேண்டாம் என்றும்  முன்னதாகவே ஜமா அத்துல் உலமா செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
எனவே நாம் அனைவரும் இந்த ரமழானை  சமூக விலகலை கடைபிடித்து இந்த கொரோனா வைரஸ் நோயிலிருந்து பாதுகாப்பு பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.


Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback