Breaking News

டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லையா ? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்   டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக ஒத்துழைக்க மறுத்தது பண்ணும்  அட்டுழியம் பாரீர்.இவர்களுக்கு சிகிச்சை அளிக்க நர்சுகள் திணறுகின்றனர் என்று  ஒரு செய்தியை பலரும் ஷேர் செய்கின்றார்கள்



அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


அன்புக்குரிய மக்களே இன்றைய காலகட்டத்தில் நம் அனைவரையும் மதங்களை வைத்து பிரித்து அவர்களைத் தனிமைப்படுத்தி கொச்சைப்படுத்தி அவர்களுக்கு இடையில் மத துவேஷத்தை பரப்பும் வகையில் சில கெட்ட எண்ணம் உடைய மனிதர்கள் தவறான செய்திகளை நமக்கிடையே பல்வேறு விதமாக பரப்பிக்கொண்டு வருகிறார்கள் அந்த வகையில் தற்போது முஸ்லிம்களை பற்றி அவதூறான விஷயங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்கிறார்கள். அதற்கு எந்த ஒரு ஆதாரத்தையும் அவர்கள் காட்ட மாட்டார்கள் ஏனென்றால் அதற்கு ஆதாரமே கிடையாது.



அந்த ரீதியில் தற்போது தப்லீக் ஜமாஅத்தின் மீது எந்தவொரு ஆதாரமும் இல்லாமல்  டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக ஒத்துழைக்க மறுத்து அவர்கள் செய்யும் அட்டுழியம் பாரீர்.இவர்களுக்கு சிகிச்சை அளிக்க நர்சுகள் திணறுகின்றனர் என்று பரப்புகிறார்கள் 

ஆனால் ஒரு மனிதன் நிர்வாணமாக பள்ளிவாசலில் நுழைந்து அங்கிருக்கின்ற அனைத்து கண்ணாடிக் கதவுகளை உடைத்து மதகுருமார்கள் அமரும் இடத்தில் வந்து படுக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது 

இந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டியது இதுபோன்ற மத துவேஷங்கள் பரப்பும் மனிதர்களை அடையாளம் கண்டு அவர்களை நாம் சமூதாயத்தை  விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும்


பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ பாகிஸ்தானில் நடந்தது ஆகும்

மேலும் அந்த சம்பவம் 25.08.2019 அன்று நடந்தது ஆகும்

யாரோ, எங்கோ, எப்போதோ , எதற்க்கோ நடத்திய சம்பவங்களை டெல்லியோடு தொடர்பு படுத்தி பொய்யான செய்தியினை ஷேர் செய்கின்றார்கள் 

அட்மின் மீடியாவின் ஆதாரம்



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback