Breaking News

இந்த ஆண்டு ஹஜ் பயனம் ஒத்திவைக்க வேண்டுகோள்: சவுதி அமைச்சர் தகவல்

அட்மின் மீடியா
0
கொடூர கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் பல பெரும் சரிவை சந்தித்துள்ளது.



பெரும் கூட்டம் கூடுவதை பல உலக நாடுகள் தவிர்க்க சொல்லிவருகின்றது. கொரானாவின் தாக்கம் இன்னும் முடியவில்லை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பல்வேறு நாடுகளில் உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

ஹஜ்  என்பது முஸ்லிம்கள் ஆண்டு தோறும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணமாகும். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது இறைவனை வணங்குவதற்கான ஓர் தனி முறையாகும். 

இந்நிலையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் ஹஜ் செய்யபடும் அந்த  ஹஜ் பயணத்தை இஸ்லாமியர்கள் ஒத்திவைக்கும்படி சவுதி அரேபியா அமைச்சர் முகமது பென்டன் வலியுறுத்தியுள்ளார். 





முன்னதாக  உம்ரா பயணத்தை சவுதி அரசு ரத்து செய்தது குறிப்பிடதக்கது

source:

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback