Breaking News

ஏப்.,14க்கு பின் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? வதந்தியின் உண்மை என்ன

அட்மின் மீடியா
0
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பாஅதிப்பை ஏற்படுத்தி வருகின்றது இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது அதேபோல் இந்தியாவில் கடந்த 24.03.2020 முதல்  21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.




எனினும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை நீட்டிப்பு செய்துள்ளதாக தகவல் வெளியானது. 


இந்நிலையில் தெலுங்கானாவில் ஊரடங்கு நீட்டிப்பு ஏப்.14-ம் தேதி முதல் ஜுன் 3 வரை அமலில் இருக்கும் என அறிவிப்பு வெளியானது. கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நீட்டிப்பு செய்துள்ளதாக தகவல் வெளியானது.


இதற்க்கும் பதில் அளித்த  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்  அவர்கள்  கொரோனா பரவலை தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. மத்திய அரசு கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து கவனித்து வருகிறது.தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும். எந்த முடிவு எடுக்கப்பட்டாலும் அது மக்களின் நலன் மற்றும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டே அரசு முடிவெடுக்கும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த, திறமையான அதிகாரிகள் குழு போராடி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்



Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback