ஏப்ரல் 15 முதல் ரயில், விமானம் ,பஸ் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.!
அட்மின் மீடியா
0
ஊரடங்கு முடிந்த பின்னர் ஏப்.,15ம் தேதிக்கு பிறகு சர்வதேச விமானங்கள் முன்பதிவு தொடங்கியது
இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து வருகின்ற ஏப்ரல் 15-ம் தேதியில் இருந்து வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கான ரயில், விமான முன்பதிவு தொடங்கியது.
இந்தியாவில் தற்போது படிப்படியாக கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் ஏப்ரல் 15-ம் தேதிக்கு மேல் அனைத்து ரயில், விமான முன்பதிவு தொடங்கியுள்ளது.
கொரேனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு வரும் 14-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் 15-ம் தேதியில் இருந்து அனைத்து வகையான போக்குவரத்துக்களும் இயங்க வாய்ப்பு உள்ளதால் வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கான ரயில், விமானம், பேருந்து ஆகியவற்றின் முன்பதிவு தொடங்கியுள்ளது
இது தற்போதைய நிலவரப்படி தொடங்கியுள்ளதாகவும், ஊரடங்கு நீடிப்பது குறித்து உத்தரவு வந்தால் பின்னர் அறிவிக்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
.
Tags: முக்கிய அறிவிப்பு
