டெல்லி மாநாடு சென்ற 1103 பேர் தாமாக முன் வந்து தகவல் கொடுத்தனர்.. ரொம்ப நன்றி.
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் இருந்து டெல்லி மாநாடு சென்ற 1103 பேர் தாமாக முன் வந்த தங்களை பற்றிய தகவல் கொடுத்தனர், அவர்களில் 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் இன்று தெரிவித்துள்ளார்
மேலும் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் தமிழக்த்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி மாநாட்டில் யார் எல்லாம் கலந்து கொண்டீர்களோ அவர்கள் எல்லாம் வந்து எங்களிடம் கூறும்படி வேண்டுகோள் விடுத்து இருந்தோம். நீங்கள் எல்லோரும் எங்களிடம் வந்து சொன்னால்தான் உங்களுக்கு நல்லது என தெரிவிதது இருந்தோம் அதனை ஏற்று உடனடியாக அனைவரும் ஒத்துழைப்பு அளித்து தொடர்பு கொண்டவர்களுக்கு நன்றி தெரித்தார்
மேலும் டெல்லி சென்று திரும்பிய 110 பேர் தவிர, தமிழகத்தில் இன்று புதிதாக வேறு யாருக்கும் கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை எனவே சமூக பரவல் என்ற நிலைக்கு தமிழகம் செல்லவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.
மேலும் மாநாட்டுக்கு சென்ற 1103 பேரில் 658 பேருக்கு டெஸ்ட் எடுத்துவிட்டோம். மீதமுள்ளவர்களுக்கு நாளை எடுத்துவிடுவோம். இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டாலும் அதை எதிர்க்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது'.
பாதிக்கப்பட்ட 110 பேர் 15 மாவட்டங்களிலிருந்து வந்துள்ளனர்.
கோவை 28 பேர்,
தேனி 20 பேர்,
திண்டுக்கல் 17,
மதுரை 9 பேர்,
நெல்லை 6 பேர்,
சிவகங்கை 5, பேர்
திருப்பத்தூர் 7 பேர்,
செங்கல்பட்டு 7 பேர்,
திருவாரூர் 2 பேர்,
தூத்துக்குடி 2 பேர்,
ஈரோடு 2 பேர்,
காஞ்சிபுரம் 2 பேர்,
கரூர் 1,
சென்னை 1,
திருவண்ணாமலை 1
டெல்லியில் பல நாட்டினரும் பங்கேற்ற நிகழ்ச்சி என்பதால், அதில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா வந்துள்ளதே தவிர, சமூக பரவலால் வரவில்லை என தெளிவு படுத்தினார்
மேலும், டெல்லி சென்று திரும்பியவர்கள் பலரிடமும் பழகியிருப்பார்கள். அவர்களின் மூலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட நிலையில், டெல்லி சென்று திரும்பியவர்களை தவிர புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை பீலா ராஜேஷ் அவர்கள் உறுதி செய்துள்ளார்.
Tags: முக்கிய அறிவிப்பு
