கொரோனா நிவாரணம் 1,000 ரூபாய் உங்களுக்கு இருக்கா என தெரிந்து கொள்வது எப்படி
அட்மின் மீடியா
0
தமிழக அரசின் கொரோனா நிவாரணம் 1,000 ரூபாயை ரேஷன் அட்டைதாரர்கள் பெறுவது எப்படி?
அந்த உதவித் தொகையை பெற நீங்கள் தகுதியானவரா? இல்லையா? என்பதை பார்ப்போம்
கொரானாவினால் ஊரடங்கு உத்த்ரவு உள்ளநிலையில் தமிழக மக்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்குகின்றது அந்த உதவி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ 1000 வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
மேலும் ஏப்ரல் மாதம் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் ஆகியன இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிவாரண நிதி உங்களுக்கு வருமா என்பதை நீங்கள் உங்கள்் மொபைலில் தெரிந்துகொள்ளலாம்.
உங்கள் மொபைலில் கீழ் உள்ள லின்ங்க்கில் உள்ள ஆப் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்
- முதலில் அந்த ஆப்பில் உங்கள் ரேஷன் கார்டில் எந்த எண் கொடுத்துள்ளீர்களோ அந்த செல்போன் எண்ணை பதிவு செய்யுங்கள் அதன் பின்னர் கீழே இருக்கும் கேப்ட்சாவை கொடுங்கள். அப்போது பதிவு செய் என்ற பட்டனை அழுத்துங்கள்.
- அப்போது உங்கள் மொபைலுக்கு ஒன்டைம் பாஸ்வேர்டு வரும். அதை கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் டைப் செய்துவிட்டு உள்நுழை என்ற பட்டனை அழுத்துங்கள்.
- அதில் ஏராளமான தகவல்கள் வரும் அதில் "உரிமம்" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் 1000 ரூ நிதித் தொகை என கொடுத்திருப்பார்கள். அதில் உரிமம் அளவு எனும் இடத்தில் ஒன்று என்ற எண் (1.000) இருந்தால் உங்களுக்கு நிவாரணம் உண்டு.
- ஜீரோ என இருந்தால் நீங்கள் அதை வாங்கிவிட்டீர்கள் என்பது அர்த்தம்
இந்த நிவாரணம் நாள்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கு 1,000 ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும். கூடவே, ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகியவற்றையும் பொதுமக்கள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் நிவாரண நிதி, ரேஷன் இலவசப் பொருள்களை வாங்க விருப்பமில்லாத அட்டைதாரர்கள் அதுகுறித்து https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திலோ அல்லது ஆப் மூலமாகவோ அப்ளை செய்யலாம்
மேலும் அரசு தற்போது அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டுமே தருவதாக தெரிகின்றது
Tags: முக்கிய அறிவிப்பு
