Breaking News

ரூ.1,000 நிவாரணம் மற்றும் இலவச அரிசி உள்ளிட்ட பொருட்கள் டோக்கன் மூலம் இன்று முதல் விநியோகம்

அட்மின் மீடியா
0
கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதன் காரணமாக ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் சட்டப்பேரவையில் குடும்ப அட்டைகளுக்கு 1000 ரூபாய் ரொக்கம், அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களின் தொகுப்பு இலவசமாக அளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.




ரூ.1,000 நிவாரணம் மற்றும் இலவச அரிசி உள்ளிட்ட பொருட்கள் டோக்கன் மூலம் இன்று முதல் விநி யோகிக்கப்படுகிறது.


மேலும் தற்போது கட்டுக்குள் உள்ள கொரானா வைரஸ் மேற்கொண்டு பராவாமலிருக்க பொதுமக்கள்   நலன் கருதி அரசு சில  கட்டுபாடுகளை விதித்துள்ளது 

1.ஒவ்வொரு நாளும் 100 குடும்ப அட்டைகள் வீதம் கடை ஊழியர்கள்  அவரவர் வீடுகளுக்கே வந்து டோக்கன் வழங்குவார்கள். டோக்கன் பாரபட்சமின்றி தெருவாரியாக  வீடுகளின் வரிசைபடி வழங்குவார்கள்.


2. டோக்கன் பெற்றவர்கள் அதில் குறிப்பிட்டுள்ள காலத்தில் ரேஷன் கடைக்கு செல்லவேண்டும். 


3. அங்கு வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் கைகளை கழுவி கிருமி நாசினி தேய்த்துக் கொண்டு 1 மீட்டர் இடைவெளியில் நின்று பொருட்களை வாங்கிச் செல்லவேண்டும். 


4. அனைத்து கார்டுகளுக்கும் டோக்கன் வீடு தேடி வந்து கொடுப்பார்கள் அதுவரை பொறுமைகாக்க வேண்டும்.    

5. அந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்குள் வந்து நேரடியாக பொருட்களை நியாயவிலைக் கடைகளில் வாங்கவும், 


சமூக விலகலை முறையாக கடைபிடிக்கவும் பொதுமக்களுக்கும் கடை விற்பனையாளர்களுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback