Breaking News

சென்னையில் உள்ள ஃபீனிக்ஸ் மாலுக்கு மார்ச் 10 முதல் 17ஆம் தேதி வரை சென்று வந்தவர்களா நீங்கள்? உங்களுக்கான சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு.......

அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்துவரும் நிலையில், கடந்த மாதம் 10 முதல் 17ஆம் தேதி வரை சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலுக்கு சென்றவர்களை உடனடியாக தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி எண்ணை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது



சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் இயங்கிவரும் லைப்ஸ்டைல் என்ற கடையில் வேலைபார்த்த மூன்று ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அவர்களுடன் வேலை பார்த்த மற்ற ஊழியர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


 எனவே மார்ச் 10 முதல் 17 வரை ஃபீனிக்ஸ் மாலுக்கு சென்று வந்தவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கவனமுடன் இருக்கவேண்டும். கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாகத் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் : 044 2538 4520    -     044 4612 2300 என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback