தமிழக முதல்வர் உரையாற்றியது என்ன முழு விவரம்
அட்மின் மீடியா
0
தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து உரையாற்றினார் அதில் தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன் எனவும் விழித்திரு, தனித்திரு, வீட்டிலிரு.. என்று கூறிய தமிழக முதல்வர் 21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினார்.
பொறுப்பான குடிமக்களாக இருந்து நம்மையும் சமுதாயத்தையும் பாதுகாக்க உறுதி ஏற்போம் மேலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் என்பதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை, அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்றால் சமூக விலகலை கடைபிடிக்கவேண்டும், கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று கூறினார் மேலும்
கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் உலகம் முழுவதும் பரவி வருகிறது. கரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து வருகிறது, கொரோனா பரவுவதை தடுக்க தற்போது ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் அவசியம். எனவும் ஜாதி, மத ,இன வேறுபாடுகளைகளை கடந்து கொரோனாவை விரட்ட உறுதி ஏற்போம் என உரையாற்றினார்
Tags: முக்கிய அறிவிப்பு