Breaking News

கொரானாவினை விரட்ட ஆவிபிடியுங்கள் என வலம் வரும் வீடியோ உண்மையா?

அட்மின் மீடியா
1
சூடான நீரிலிருந்து ஒரு நீராவியை உள்ளிழுப்பதன் மூலம்  கொரோனா வைரஸை 100 சதவீதம் கொல்லும் என்று ஒரு சீன நிபுணர் அனைவருக்கும் உறுதியளிக்கிறார்.  வைரஸ் மூக்கு, தொண்டை அல்லது நுரையீரலுக்குள் நுழைந்தாலும் கூட.  கொரோனா வைரஸால் சுடு நீர் நீராவியில் நிற்க முடியாது ... உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இந்த தகவலை வட்டமிடுங்கள்.



என்று ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையாயும் சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

உலக நாடுகளே கவலையில் உள்ளது இந்த கொடிய கொரானா வைரசை கட்டுபடுத்த மருந்துகள் இல்லையே என இந்த நிலையில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் போல் வாயில் வந்ததையும் மனதில் பட்டதையும் கொரானாவிற்க்கு மருந்து என இணையம் முழுவதும் பொய்யான செய்திகள் தான் 

மேலும் சீனாவில் மருந்து கண்டுபிடித்துவிட்டார்கள், அமெரிக்காவில் மருந்து கண்டுபிடித்துவிட்டார்கள், அதை சாபிடுங்க,  இதை சாப்பிடுங்க , இதை குடியுங்க என பல பொய் செய்திகள் தான் இணையம் முழுவதும் அந்த வரிசையில் இதுவும் ஒன்று


கோவிட் -19 என்ற  வைரஸிற்கான சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகளைக் கண்டுபிடிப்பதற்கு விஞ்ஞானிகள் துடிக்கின்றனர், மேலும் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க சுகாதாரப் பாதுகாப்பு வல்லுநர்கள் பணியாற்றி வருகின்றனர் .


பொதுவாக ஆவி பிடிப்பது நல்லதுதான் ஆனால் கொரானாவிற்க்கான மருந்து இல்லை 


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

1 Comments

  1. Tamks to Admiள Media.Please whatch Corona NEWS .Aளd Te LLthe Truth

    ReplyDelete