Breaking News

கொரானா எதிரொலி: நாடு முழுவதும் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருப்பவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
2
கொரானா எதிரொலி: நாடு முழுவதும் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருப்பவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு


நாடு முழுவதும் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருப்பவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை அடுத்து சிறைகளை காலியாக்க உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

மேலும் விசாரணை கைதிகளை ஜாமினிலோ பரோலிலோ விடுவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

கொரோனா பரவலைத் தடுக்க ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறையிலிருக்கு கைதிகளை பரோலில் அனுப்பவதற்கு உயர் மட்டக் குழு அமைக்க வேண்டும் என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கடந்த 16-ம் தேதி தாமாகவே முன்வந்து வழக்காக உச்ச நீதிமன்றம் பதிவு செய்தது. 

இந்தவழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உள்துறை செயலாளரை உள்ளடக்கிய உயர் மட்டக் குழுவை அமைத்து ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறையிலிருந்து கைதிகளை 6 வாரங்கள் வரை பரோலில் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். 

சிறையில் நிலவும் இடநெருக்கடியைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

2 Comments

  1. யாஅல்லாஹ் கோவை விசாரணை கைதிகளும் விடுதலை ஆக அருள்புரிவாக

    ReplyDelete