நகைக்கடையில் ஹிஜாப் அணிந்து வரத் தடையா? தமிழக அரசு விளக்கம்!
நகைக்கடையில் ஹிஜாப் அணிந்து வரத் தடையா? தமிழக அரசு விளக்கம்!
தமிழகத்தில் உள்ள நகைக்கடைகளில் ஹிஜாப் அல்லது புர்கா அணிந்து வருவோருக்கு அனுமதி இல்லை என்றும், அவர்களுக்கு நகை விற்பனை செய்யப்பட மாட்டாது என்றும் கடந்த சில தினங்களாகச் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
இந்த விவகாரம் பொதுமக்களிடையே, குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.மேலும் கண்டறிகபராசக்திஇந்த விவகாரத்தின் தீவிரம் கருதி,
இந்த செய்தி குறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ 'தகவல் சரிபார்ப்பகம்' (Fact Check TN) (ஜனவரி 13, 2026) ஒரு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.
நகைக்கடைகளில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது. தமிழகத்தில் அத்தகைய எந்தவொரு கட்டுப்பாடும் அல்லது அறிவிப்பும் நகை வியாபாரிகள் சங்கத்தால் வெளியிடப்படவில்லை.
உண்மையில், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள சில நகை வியாபாரிகள் சங்கங்கள் மட்டுமே பாதுகாப்பு காரணங்களுக்காக முகத்தை மறைத்து வரும் (ஹெல்மெட், மாஸ்க், ஹிஜாப் போன்றவை) வாடிக்கையாளர்களை அடையாளம் காண வசதியாக இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
செய்தியின் படத்தில் இடம் குறிப்பிடப்படாததால் தமிழ்நாட்டில் நகைக்கடைகளில் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தவறாகப் பகிரப்படுகிறது.
நகைக்கடைகளில் ஹிஜாப் அணிந்து வரத் தடை - தமிழ்நாட்டில் அல்ல !வதந்தி“பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஜாப் அணிந்து வருவோருக்கு நகை விற்பனை செய்யமாட்டோம்.” என்று நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.உண்மை என்ன ?
அட்மின் மீடியா ஆதாரம்:-
https://www.thehindu.com/news/national/uttar-pradesh/no-jewellery-to-customers-wearing-burqa-mask-veil-in-varanasi-traders-body/article70494307.ece
Tags: FACT CHECK மறுப்பு செய்தி
