Breaking News

நேர்மைக்கு கிடைத்த பரிசு..! தூய்மை பணியாளர் பத்மாவை நேரில் சந்தித்து வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1 லட்சம் பரிசு!

அட்மின் மீடியா
0

நேர்மைக்கு கிடைத்த பரிசு..! தூய்மை பணியாளர் பத்மாவை நேரில் சந்தித்து வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1 லட்சம் பரிசு!

சென்னை தியாகராய நகர் பகுதியில் நேற்று தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பத்மா, சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த தங்க நகைகளைக் கண்டுள்ளார். அந்த நகைகளைத் தனது உடைமையாக்கிக் கொள்ள நினைக்காமல், உடனடியாகப் பாண்டி பஜார் காவல் நிலையத்திற்குச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்தார்.





பத்மா ஒப்படைத்த நகைகளைப் போலீசார் ஆய்வு செய்தபோது, அதில் சுமார் 45 பவுன் தங்கம் இருப்பது தெரியவந்தது. இதன் இன்றைய சந்தை மதிப்பு சுமார் 45 லட்ச ரூபாயாகும். அத்தனை மதிப்புமிக்க நகைகளைத் தயக்கமின்றி ஒப்படைத்த பத்மாவின் நேர்மையைக் கண்டு வியந்த போலீசார், உரிய விசாரணையை மேற்கொண்டு அந்த நகைகளை அதன் உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். 

பத்மாவின் இந்த உயரிய பண்பு குறித்த செய்தி இணையதளங்களில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில், பத்மாவின் நேர்மையைப் போற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், பத்மாவுக்குச் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர், அவரது நற்செயலைப் பாராட்டி ரூபாய் ஒரு லட்சத்திற்கான பரிசுத்தொகை காசோலையை வழங்கினார். "ஏழ்மையிலும் நேர்மை மாறாத பத்மா போன்றவர்கள் சமூகத்தின் உண்மையான அடையாளங்கள்" எனப் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback