Breaking News

பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க கடைசி நாள் என்ன தெரியுமா

அட்மின் மீடியா
0

பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க கடைசி நாள் என்ன தெரியுமா

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் இலவச வேட்டி சேலை வழங்கப்படுகிறது. மேலும் பொங்கல் பரிசு ரொக்கமாக ரூ.3,000 வழங்கப்படுகிறது. 

பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 8ஆம் தேதி தொடங்கி வைத்தார்.இதனை அடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசு ரேஷன் அட்டைதார்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.3,000 ரொக்க வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் (புதன்கிழமை) வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதனை பயன்படுத்தி விடுபட்டவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு வருபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கைரேகை பதிவாகாத வயதானவர்களுக்கு கையொப்பத்தை பெற்றுக் கொண்டு பணம் மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டது. அதே நடைமுறையை இந்த ஆண்டும் செயல்ப டுத்தப்படும். கைரேகை பதிவாகவில்லை என்று அவர்கள் கவலைப்பட தேவையில்லை. கைரேகை பதிவாகாதவர்களுக்கு, பொங்கல் பரிசு பெறுவதற்கான கடைசி நாளில் அவர்கள் பணம் பெற தேவையான நடவடிக்கை கள் எடுக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback