கொரானா ஸ்டிக்கர் ஒட்டபட்ட வீடுகளை பார்த்து பயப்படவேண்டாம்
அட்மின் மீடியா
1
கொரானா ஸ்டிக்கர் ஒட்டபட்ட வீடுகளை பார்த்து கொரானா பாதித்த வீடுகள் என பொதுமக்கள் பயப்படவேண்டாம் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வீடுகளில் மட்டுமே ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆனால் அதனை தவறாக புரிந்த கொண்ட மக்கள், ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள வீடுகளில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரப்பினர். இதனையடுத்து, மக்களின் நலனுக்காகவே வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள், தங்களை தனிமைப்படுத்தியுள்ளதாகவும், வதந்திகளை பரப்பி அவர்களை காயப்படுத்த வேண்டாம் எனவும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
Tags: முக்கிய செய்தி

But in non foreigners house are also the govt sticker this post
பதிலளிநீக்குExample near my house they sticked but she only working in Phoenix mall