Breaking News

FACT CHECK பிரியாணியில் கருத்தடை மாத்திரையா ? உண்மை என்ன?

அட்மின் மீடியா
1
கடந்த சிலநாட்களாக சமூகவலைதளங்களில் முஸ்லீம் கடையில் யாரும் பிரியாணி வாங்காதீர்கள் அங்கு பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலக்கின்றார்கள் என ஷேர் செய்கின்றார்கள் 






அந்த செய்தி உண்மையா என பலரும் அட்மின் மீடியாவில் கேட்க அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது


ஆம் அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

இந்த செய்தி கடந்த சில தினங்களாக சமூகவலைதளங்களில் பரவியதை யடுத்து கோவையில் காவல்துறையினர் விசாரனையில் ஈடுபட்டார்கள் விசாரனை முடிவில் அந்த செய்தி பொய்யானது என தெரியவந்துள்ளது மேலும்

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண்அவர்கள் , தனது டுவிட்டர் பக்கத்தில், 'இது முற்றிலும் தவறான செய்தி. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் இதுபோன்ற செய்திகளை பதிவிடவோ, பகிரவோ வேண்டாம். மீறினால் கடும் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும்' எனப் பதிவிட்டுள்ளார்.

முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் துவங்கியதும் இதுபோன்ற வதந்திகள் சமூகவலைதளங்களில் பரப்பப்படுகின்றன. இது, இந்து - முஸ்லிம் நல்லுறவில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், இது போன்ற வதந்திகளை பரப்புபவர்களை கைது செய்ய, போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து இந்த தகவலைப் பரப்பியது யார், மேலும் பரப்புவோர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

பலரும் ஷேர் செய்யும் செய்தியில்   3 புகைப்படங்கள் உள்ளது

முதல் புகைப்படம் 

போலிஸார் பின்புறம் சிலர் உள்ளது போல் உள்ள புகைப்படம் கடந்த  11.07.2019 அன்று உத்தரப் பிரதேச மாநிலம், பிஜ்னோரில் சட்டவிரோதமான முறையில் மதராஸா உள்ளே ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தார்கள் என்ற  குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் ஆவார்கள்

இரண்டாவது புகைப்படம்

கூகுள்  சென்று மாத்திரைகள் என டைப் செய்தால் அது போல் பல்லாயிரம் புகைப்படங்கள் வரும் 

மூன்றாவது புகைப்படம்

பிரியாணி பாத்திரத்துடன் உள்ளவர்  Videosmylive - Best Indian Food Cooking Channel !! பிரபல யூடியூப் சேனலில் கடந்த 01.07.2016 அன்று வெளிவந்த பிரியாணி செய்வது எப்படி என்பதில் வைத்துள்ள தம்நில் போட்டோவாகும்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.youtube.com/watch?v=QJrWViyOw68


https://twitter.com/bijnorpolice/status/1149309124049432578


https://www.dinamalar.com/news_detail.asp?id=2493794&Print=1


http://www.puthiyathalaimurai.com/newsview/64963/help-stop-the-spread-of-rumours-and-fake-news-on-whatsapp

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

1 Comments