தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமடைந்தார்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் இரண்டாவதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் குணமடைந்துவிட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த டெல்லியை சேர்ந்த நபர் குணமடைந்தார். அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு பரிசோதனைகளின் முடிவுகளில் இவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார். தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 2-வது நபர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
