Breaking News

துருக்கி பள்ளிவாசல் மூடபடாது என ஜனாதிபதி அறிவித்தாரா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
துருக்கி ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு மஸ்ஜித்கள் மூடப்பட மாட்டாது நான் அல்லாஹ்வை  நம்பக்கூடியவன்  மஸ்ஜித்கள் மூடப்படுவது கொரோனாவை விட பயங்கரமானது
என்று ஒரு செய்தியை சமுகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது  

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

துருக்கி இஸ்தான்புல் - கொரோனா வைரஸால் பாதிப்பு  இருக்கும் வரை  மசூதிகளில் கூட்டாக பிரார்த்தனை செய்வதை நிறுத்தப்படும் என்று துருக்கியின் மத தலைவர் அலி எர்பாஸ் திங்களன்று ( 16 மார்ச் - 2020) தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய எர்பாஸ், தனிப்பட்ட தொழுகைக்காக மசூதிகள் திறந்து வைக்கப்படும் என்றார்.

துருக்கி மொத்தம் 18 கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அடையாளம் கண்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் பஹ்ரெடின் கோகா திங்களன்று தெரிவித்தார். வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது, பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவது, 

அட்மின் மீடியா ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Share this