Breaking News

என்ன நடக்குது நாட்டில் ? கொரானாவை எப்படி பரப்புகின்ரார்கள் என ஷேர் செய்யும் வீடியோவின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
என்ன நடக்குது நாட்டில் ? கொரானாவை எப்படி பரப்புகின்ரார்கள் என்று ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவை சமுகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்
அந்த வீடியோவில் பல இஸ்லாமியர்கள் தட்டுகள் , ஸ்பூன்கள் உள்ள வற்றை நக்குகின்றார்கள், கையால் வழித்து சாப்பிடுகின்றார்கள் 

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தியின்  உண்மை என்ன


இந்த வீடியோவில் உள்ளவர்கள் உலகம் முழுவது பரவி வாழும் தாவூதி போஹ்ரா முஸ்லிம்கள்

அவர்களின் மத குருமார்கள்  சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவுவதற்கு முன்பு  அதில் மீதி  இருக்கும் உணவுகளை  வீணாக்காமல் அதை சாப்பிடும் வழக்கம் என்பது அவர்களின்  பாரம்பரிய நம்பிக்கை 

நீங்கள் கவனமாகப் அந்த வீடியோவை பார்த்தால், இந்த வீடியோவில் உள்ள முஸ்லிம்கள் தட்டு கழுவும் முன் அதுபோல் செய்வதை நீங்கள் கவனிப்பீர்கள்.

இந்த வைரல் வீடியோவின் பின்னணியில் உள்ள யதார்த்தத்தைப் பார்ப்போம்…

நாம் உண்ணும் உணவை மதிக்க வேண்டும் அவர்கள்  அடுப்பில் ஏதேனும் பருப்பு அல்லது நெல் துகள் விழுந்தால், அவர்கள் அதை எடுத்து சாப்பிடுவார்கள்.

ஒன்றை நன்றாக நாம் அனைவரும் விளங்கி கொள்ள வேண்டும் ஆன்மிகம் சார்ந்த சில பழக்க வழக்கங்களை மூடநம்பிக்கை என யாரும் எடுத்துக்கொள்ள முடியாது 


மேலும் பலராலும் ஷேர் செய்யபடும் வீடியோவினை 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்


அட்மின் மீடியா ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback