Breaking News

அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை அப்புறபடுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை அப்புறப்படுத்த தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

திருப்பூரில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுந்தரர், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. காவல்துறை அனுமதியின்றி போராட்டம் நடைபெற்று வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, சிறுவர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று புகார் தெரிவிக்கப்பட்டது. 

விசாரணை இறுதியில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை உடனடியாக அப்புறப்படுத்த டிஜிபிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags: முக்கிய அறிவிப்பு

Share this