அலட்சியமாக பணி செய்த அதிகாரி.. வைரலான வீடியோ..' - உடனடி சஸ்பெண்ட்
அட்மின் மீடியா
0
சீனாவில் ஆரம்பித்த கொரானா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.
இந்த வைரஸ் பரவாமல் தடுக்க விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதனிடையே, ரயில் நிலையத்தில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரி ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியிலுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் உடல் வெப்பநிலையைக் கணக்கிட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார். அந்த அதிகாரி, ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறும் பயணிகளுக்கு இருக்கையில் அமர்ந்துகொண்டு செல்ஃபோன் பேசியபடி அலட்சியமாக பரிசோதனைகளை செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.
இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் தும்க்கூரில் உள்ள ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்த வீடியோவை பார்வையிட்ட கர்நாக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீ ராமலு கவனக்குறைவு மற்றும் சரியாக பணி செய்யாததற்காக அந்த அதிகாரி இடைநீக்கம் செய்யப்படுகிறார். மேலும் மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதாரத்துறை பணியாளர்கள் மக்களுக்காக இரவும் பகலும் உழைத்து வருகின்றனர். இதுபோன்ற சமயங்களில் இத்தகைய அலட்சியமான செயல்கள் கண்டிக்கத்தக்கது" என ட்வீட் செய்துள்ளார்
Tags: முக்கிய அறிவிப்பு