Breaking News

கொரானாவிற்க்கு மருந்து கண்டுபிடித்து அமெரிக்கா சிங்கப்பூருக்கு அனுப்பிய? உண்மை என்ன ?

அட்மின் மீடியா
0
இன்றைய  வாட்ஸப் வதந்தி செய்தி

இன்று 30.03.2020 மாலை முதல் வாட்ஸப்பில் திடிரென சில புகைபடங்களும் ஓர் ஆடியோவும் வலம் வருகின்றது அந்த ஆடியோவில்
மருந்து வந்துருச்சி மருந்து வந்துருச்சி
தடுப்பு ஊசி கண்டுபிடிச்சிட்டான் அமெரிக்ககாரன்...அது
ஒரு ஊசி போட்டா  முன்று மணி நேரத்தில் கிளியர் ஆயிடுமா
சிங்கப்பூர்ல வந்தி இறங்கிடுச்சி
நம்ம சாமி  இருக்கானில்ல சாமி சுந்தர்ராசு மகன்...அவங்கே ஏர்போட்டுல தான் வந்து இறங்கி இருக்கு...அவே ஏர்போட்ல தான் வேலை பார்கிறான் அவங்கதான் இறக்கிருக்கிராங்க...வந்து இறங்கிருச்சி நாளைக்கு ரிலிஸ் ஆகுது
என்ற ஒரு ஆடியோவும் அந்த ஆடியோவுடன் விமான நிலையத்தில் மருந்து பெட்டிகளின் புகைபடங்களையும் ஷேர் செய்து வருகின்றார்கள்



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா வாசகர்கள் பலர் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி  பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

அந்த மருந்துகளை அமெரிக்கா அனுப்பவில்லை. சீன நாடு கொரானாவினால் பாதிக்கபட்ட பலநாடுகளுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மருத்துவ உபகரணங்களை இலவசமாக வழங்கி வருகின்றது அது போல் மலேசியாவிற்க்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்கியது அந்த விமானநிலையம் சிங்கப்பூர் இல்லை மலேசியாவில் உள்ள சபாஹ் விமானநிலையம்

மேலும் கொரானாவிற்க்கான தடுப்பு மருந்தை இதுவரை எந்த நாடும் கண்டுபிடிக்கவில்லை

எனவே பொய்யான செய்தியினை யாரும் ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியா ஆதாரம்

https://www.msn.com/en-my/news/national/sabah-gets-fresh-boost-of-medical-masks-supplies-from-china/ar-BB11RZc0


அட்மின் மீடியா ஆதாரம்

https://www.thestar.com.my/news/nation/2020/03/29/china-reciprocates-sabah039s-kindness-with-medical-supplies

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback