Breaking News

குர் ஆன் சூறதுல் பகராவில் உள்ள முடியை தண்ணீரில் கலந்து குடித்தால் நோய் ஏதுவும் வராதா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
1
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் உங்கள் வீட்டில் உள்ள குர் ஆனில் சூறதுல் பகறாவில்  ஒரு கண்மயிர் போன்ற முடி தென்படும்  அதை தண்ணீரில் போட்டு குடித்தால் உங்களுக்கு கொரோனா என்ன வேறு எந்த நோயும் வராது அது ஒரு அரு மருந்தாகும் என ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள் 



அந்த செய்தி உண்மையா? என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க.. அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது.


ஆம்.. அந்த செய்தி பொய்யானது.

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


குரானில் முடி இருக்கும் அதனை தண்னீரில் போட்டு குடியுங்க என்று 
புனித அல் குர் ஆன்னில் கூறபட்டுள்ளதா?


குரானில் முடி இருக்கும் அதனை தண்னீரில் போட்டு குடியுங்க என்று 
நம் உயிரிலும் மேலான நபிஸல் அவர்கள் கூறியுள்ளார்களா?


குரானில் முடி இருக்கும் அதனை தண்னீரில் போட்டு குடியுங்க என்று 
ஷகிஹான ஹதிஸ் ஏதேனும் உள்ளதா?

அவ்வாறு நாம் சிந்தித்துப் பார்த்தாலே இது போன்ற விஷயங்களை நாம் ஷேர் செய்ய மாட்டோம்.   


நமது நபியவர்கள் இது போன்று எந்த ஒரு விஷயத்தையும் அறிவித்ததாக மார்க்க அறிஞர்கள் நமக்கு விளக்கவில்லை..

மேலும் இதுபோல் எந்த ஒரு ஹதீஸும் நமது கண்களுக்குப் புலப்படவில்லை இது முழுக்க முழுக்க பொய்யான செய்தி மட்டும் தான்..  

பொய்களைப் பரப்புபவர்களே  நன்கு சிந்தியுங்கள். நமது நபியவர்கள் கூறுவதை

நமது நபி  ஸல் அவர்கள் கூறுகிறார்கள்

என் மீது இட்டுக்கட்டிச் பொய் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது பொய்யுரைப்பவன் நிச்சயம் நரகத்தில் நுழைவான்.

நூல்: புகாரி 106, 107, 1291

ஆகையால் இனி வரும் காலங்களில் பொய்யை பரப்பாமல் உண்மையை மட்டுமே பரப்பி அல்லாஹ்வுக்கு அஞ்சி சொர்க்கம் புகுவோம்.. வெற்றி நமதே..

சரி குர்ஆனில் அதே போல் குரானில் முடி இருப்பதாக பலர் கூறுகின்றார்களே எப்படி?  குர் ஆனில் எப்படி முடி வரும். 


பொதுவாகவே நாம் குர்ஆன் ஓதும் போது நம் இமைகளிலுள்ள ஒரு சில முடி ஒரு சில குர்ஆனில் ஏதேனும் பக்கத்தில் விழுந்து விடும் அல்லது நாம் குர்ஆன் ஓதும் போது தலையை சொரிந்தாலும் தலையின் முடி விழுந்து விடும் அதற்காக அந்த முடி அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த முடி என்று நாம் நினைக்க வேண்டாம்

எனவே  இந்தக் கட்டுக்கதைகளை எல்லாம் நம்ப வேண்டிய அவசியம் இல்லை

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

1 Comments

  1. இதற்கு உண்மை நிலை அறிய களம் காண வேண்டிய அவசியமில்லை.பார்த்த மாத்திரத்திலேயே அப்பட்டமான பொய் என தெரியும்.

    ReplyDelete