Breaking News

பாலிவுட் பாடகி கனிகா கபூர்ரிடமிருந்து கொரோனா: பலருக்கு பரவியதா ?

அட்மின் மீடியா
0
பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர், 9ம் தேதி, லண்டனில் இருந்து, மஹாராஷ்டிர தலைநகர் மும்பைக்கு திரும்பினார்.அங்கு இரண்டு நாட்கள் தங்கிய அவர், 11ம் தேதி, உ.பி., தலைநகர் லக்னோவுக்கு வந்தார். இங்கு, கனிகா கபூருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. 

மருத்துவ பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து, தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவர் இந்தியாவுக்கு திரும்பியதும், லக்னோவில், மூன்று பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றது தற்போது தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள, 'பாலிவுட்' பாடகி கனிகா கபூர், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று, வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கும் வகையில் அலட்சியமாக நடந்து கொண்டதால், அவர் மீது, உத்தர பிரதேச போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


லக்னோவில், முன்னாள் எம்.பி., அக்பர் அஹமது, ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில், கனிகா கபூர் பங்கேற்றது, பெரிய விபரீதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த விருந்தில், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவும், அவரது மகனும், லோக்சபா எம்.பி.,யுமான துஷ்யந்த் சிங்கும் பங்கேற்றார். இவர்கள் மட்டுமல்லாமல், உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங், தொழிலதிபர்கள், காவல்துறை மூத்த அதிகாரிகள், அரசு அதிகாரிகள் என பலரும் பங்கேற்றது தெரிய வந்துள்ளது. இது, அனைவரையும் பீதிஅடைய வைத்தது

மேலும் இதுவரை கனிகா கபூருடன் பங்கேற்ற ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவும், அவரது மகனும், லோக்சபா எம்.பி.,யுமான துஷ்யந்த் சிங் , உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங், பங்கஜ் சிங், திரேந்திர சிங் உள்பட 3 எம்எல்ஏக்கள், மற்றும்  தொழிலதிபர்கள், காவல்துறை மூத்த அதிகாரிகள், அரசு அதிகாரிகள் உள்பட அவருடன் இருந்த 35க்கும் மேற்பட்டோர்க்கு கொரானா பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு கொரானா இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்லார்கள்


Tags: முக்கிய அறிவிப்பு

Share this