Breaking News

கொரோனா வைரசிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு என வைரலாகும் புகைப்படம் உண்மையா?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் கொரோனா வைரசிற்கு எதிரான தடுப்பு மருந்து எனஒரு புகைபடத்தை ஷேர் செய்கின்றார்கள் 



அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது







அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


உலகில் இதுவரை கொரானாவிற்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை, 
ஆனால் அமெரிக்க அதிபர் கடந்த வாரம் கொரானாவிற்க்கு அஸித்ரோமைசின் மற்றும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை பயன்படுத்தலாம் என்றும் அதனால் கட்டுபடுத்தமுடியும் என்று தெரிவித்தார் அந்த செய்தியினை படிக்க

 அப்படியானல் மேலே உள்ள செய்தி என்ன?

தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனம் கொரோனா வைரஸ் நோய் உள்ளதா என 10 நிமிடத்தில் கண்டறிய  சோதனை கிட்டை தயாரித்து உள்ளதாக செய்தி வெளியிட்டது. அந்த புகைபடத்தை பார்த்து  யாரோ சிலர் கொரானாவிற்க்கான  தடுப்பு மருந்து என பொய்யாக பரப்புகின்றார்கள்

மேலும் அந்நிறுவனம், அந்த கிட்டை எப்படி உபயோகிப்பது என யூடியூபில் வீடியோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்கள்




அட்மின் மீடியா ஆதாரம் 1

https://www.youtube.com/watch?v=jy3-hbxX2YU


அட்மின் மீடியா ஆதாரம் 2

http://sugentech.com/products/products-view.php?ct=7&target=32



எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback