Breaking News

நேதாஜி நகரில் கலவரமா? உண்மை என்ன? அட்மின் மீடியாவின் கள நிலவரம்

அட்மின் மீடியா
0
டெல்லி போன்று சென்னை நேதாஜி நகரில் கலவரம் நடத்த உள்ளார்கள் என ஒரு செய்தியாகவும் ஒரு   ஆடியோவாகவும் சமுகவளைதளத்தில் வருகின்றது 
உண்மை என்னஎன்று அட்மின் மீடியா விடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
இல்லை இந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

பாரத் முன்னணி என்னும் அமைப்பு குடியுரிமை சட்ட ஆதரவு ஆர்ப்பாடம் நடத்த அனுமதி கேட்டுள்ளார்கள் காவல்துறையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அவ்வளவு தான்

மற்றபடி வதந்தியாக பரவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது  அனைத்தும் பொய்யானது

வதந்தி 1

நேதாஜி நகரில் வடநாட்டவர்கள் அதிகம் என்பது பொய்

வதந்தி 2

நேதாஜி நகரில் முன்னதாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் நடந்ததும்  பொய்

வதந்தி 3

அங்கு கலவரத்திற்க்கு  செங்கல்,உருட்டுகட்டைகள், சோடா பாட்டில்கள் வந்துள்ளது என்பதும் பொய்

அந்த செய்தியில் அனைத்தும் மிகைப்படுத்தி போடப்பட்டுள்ளது அவ்வளவுதான்

மேலும் இது சம்மந்தமாக  காவல் ஆய்வாளார் அவர்களிடம்  அட்மின் மீடியா கேட்டபோது இது முழுக்க முழுக்க வதந்தி செய்தியாகும் 
யாரும் நம்பாதீர்கள் எனவும்

பாரத் முன்னணி சார்பில் ஆர்பாட்டம் நடத்த மனு அளித்தார்கள் ஆனால் அனுமதி அளிக்கவில்லை மேலும் அவர்களிடம் ஆர்பாட்டம் நடத்தமாட்டோம் என எழுத்துபூர்வமாக எழுதியும் கொடுத்துள்ளார்கள் எனவும்

பொதுமக்களின் அமைதிக்காக  இங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கபடுள்ளது எனவும் தெரிவித்தார்


மேலும் நேதாஜி நகர் போராடகார்களின் நேரடி வாக்குமூலம்




https://youtu.be/FkZjW59LrZo


எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

இது போல் பதட்டம் ஏற்படுத்தும் செய்திகளை பரப்பி சமூக ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டாம்.

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback