Breaking News

மக்கள் ஊரடங்கு முடிந்து தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை திரும்புகின்றது

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று(மார்ச் 23) காலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டது.

பிரதமர் மோடி வேண்டுகோளின் படி, கொரோனா நோய் பரவுவதை தடுக்க, நேற்று காலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

இதனையொட்டி அனைத்து போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்டன. ஒட்டுமொத்தமாக இயல்பு வாழ்க்கையை பொதுமக்களே முடக்கிக் கொண்டனர். 

இந்த மக்கள் ஊரடங்கு நிகழ்வு   திடிரென   இன்று காலை, 5:00 மணி வரை, மக்கள் ஊரடங்கு தொடரும் என, தமிழக அரசு அறிவித்தது.

மேலும் கொரோனா எதிரொலி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.


இந்நிலையில், இன்று காலை 5 மணியுடன் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.

இதனையடுத்து தமிழகத்தில் தேவைக்கேற்ற பஸ்கள் இயக்கப்படும். சென்னையில் மட்டும் 50 சதவீத பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் அரசுப் பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டன. சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கான பேருந்துகள் குறைந்த அள்வே இயக்கபடுகின்றன. எல்லையோரங்களில் பிற மாநிலங்களுக்கு பேருந்துகள் அனுப்பப்பட்டாலும் அந்த மாநில எல்லைகள் வரைதான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மத்திய அரசு சீல் வைக்க உத்தரவிட்ட சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன




Tags: முக்கிய அறிவிப்பு

Share this