Breaking News

அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு அட்மின் மீடியாவின் பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள், மற்றுமோர் கோரிக்கை

அட்மின் மீடியா
1
கொரோனாவால் நம் தமிழக  மக்கள் பாதித்துவிடக்கூடாது என்பதில் அளவுக்கு அதிகமான அக்கறையை காட்டி வரும் தமிழக சுகாதார துறை அமைச்சர் திரு . விஜயபாஸ்கர் அவர்களுக்கு



அட்மின் மீடியாவின் தாழ்மையான கோரிக்கை
நேரத்துக்கு சாப்பிடுங்க என்பது மட்டுமே நீங்க சாப்பிடுகின்றீர்களா என்பதே எங்களுக்கு தெரியவில்லை 

உங்கள் சுறுசுறுப்பு எங்களுக்கு உற்சாகத்தை தருகின்றது

உங்கள் மனதிடம் எங்களுக்கு ஆறுதலை தருகின்றது

மக்கள் வெளியே சுற்றுகின்றார்களே என்ற உங்கள் கவலை எங்களை வீட்டிலே இருக்க் சொல்கின்றது 

இரவு பகல் பார்க்காமல் மருத்துவமனையில் நீங்கள் செய்யும் பணியினால் தான் இந்தியாவிலேயே மிகக் குறைந்த அளவிலான நோயாளிகள் உள்ள மாநிலங்களில் தமிழகமும் முக்கிய இடத்தில் உள்ளது.

கொரானா குறித்த பயம் நீங்க கொரோனா குறித்த நிகழ்வுகளை உடனுக்குடன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகின்றீர்கள்

எங்களுக்காக தூங்காமல் அரும்பாடு பட்டு, கிடைத்தை கிடைத்த இடத்தில் சாப்பிட்டு ,உறங்க நேரம் இல்லாமல் எங்களுக்காக நீங்கள் படும் கஷ்டத்தை நாங்கள் சொல்லி நீங்கள் கேட்க கூட நேரம் இல்லாமல் எண்பணி கடமை செய்வதே என உங்கள் கடமை உணர்ச்சியை பார்க்கும் போது கொரானாவே ஓடிவிடும் 

காலையில் ஒரு இடத்திலும் ... மத்திய வேளையில் வேறு ஒரு இடத்திலும்.. மாலை நேரத்தில் அடுத்தடுத்து பல இடங்களுக்கு சென்று சோதனை செய்கிறார்.. ஏசி அறையில் இருந்து கட்டளையிடாமல், மருத்துவமனை ஆய்வு, அதிகாரிகளுடன் ஆலோசனை, செய்தியாளர்கள் சந்திப்பு என களத்தில் இறங்கி செயல்படுகிறார் இதற்கு பல தரப்பட்ட மக்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

மற்ற மாநில ஊடகங்களும் சுகாதாரதுறை அமைச்சர்  விஜயபாஸ்கர் குறித்து பெருந்தன்மையாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு படி மேலே சென்றால் கொரோனா வந்த பிறகு உலக அளவில் இந்த அளவுக்கு  மிக சிறப்பாக செயல்பட்ட அமைச்சர் என்றால் அது விஜயபாஸ்கராகத்தான் இருக்க முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் தமிழகத்தில் புயல் பாதித்த சமயங்களிலும், மழை வெள்ள நிவாரண பணிகளிலும் கூட மற்றும் ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுஜித் விழுந்த சமயங்களிலும் அந்த நேரங்களில் மற்றும் சமூக இக்கட்டான சூழ்நிலைகளில் அவருடைய செயல்கள் மிக மகத்தானது பாராட்டத்தக்கது.

உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு  அவருக்கு அட்மின் மீடியா சார்பாக நன்றியினை தெரிவிக்கிறோம்..

இதே போலவே மருத்துவர்களையும் தமிழக அரசு சார்ந்த மற்ற அமைச்சர்களும் அதிகாரிகளுக்கும் அட்மின் மீடியா சார்பாக நன்றியினை தெரிவிக்கிறோம்.. 

நம்மை போல பலரும் அமைச்சர் விஜயபாஸ்கரின் சேவைகளை பாராட்டி வருகின்றனர். இவரின், செயலால் தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் உள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

1 Comments

  1. வாழ்த்துகள் அமைச்சருக்கு. அவருடைய செயல்பாடுகள் தனித்தன்மையாக உள்ளது. மேலும் உடல்நலத்தை கவனித்து கொள்ளவும்,மேலும் எங்களுக்கு சேவை செய்ய.கடவுளின் ஆசி என்றும் கிடைக்கட்டும். வாழ்க வளமுடன். ..

    ReplyDelete