Breaking News

தமிழகத்தில் முதல் கொரோனா பலி.. என்ன நடந்தது முழு விவரம்

அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பது அனைவரிடமும்  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது




மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

நீண்ட நாட்களாக அவருக்கு உடல் நலக்குறைவு இருந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார். 

உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நபருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும், உடல் ஒத்துழைக்காததால் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் ட்விட்டரில் தெரிவித்தார். 



Tags: முக்கிய அறிவிப்பு

Share this