Breaking News

சானிடைசர் தடவிகொண்டு கிச்சன் பக்கம் போகாதீங்க என ஷேர் செய்யபடும் :செய்தியின் உண்மை என்ன

அட்மின் மீடியா
1
சானிடைசர் கையில் தடவி கொண்டு சமைக்க போயிருக்காங்க கையில் நெருப்பு பற்றிக்கொண்டது என ஒரு செய்தியுடன் ஒரு புகைபடத்தையும் பலர் ஷேர் செய்கின்றார்கள் 

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 
யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

 சானிடைசர் என்றால் என்ன?

சானிடைசர் என்பது ஆல்கஹால் பெருமளவில் கொண்டு தயாரிக்கப்படும் கைகளை சுத்தப்படுத்தும் ஒரு திரவம். அசுத்தமான பொருட்களை தொட்டாலோ, வெளியில் சென்று வந்தபிறகு கைகளை சுத்தப்படுத்த இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். மருத்துவர்கள் இதனை அடிக்கடி பயன்படுவதை நாம் பார்த்திருப்போம். சானிடைசரை சில துளிகள் கைகள் முழுவதும் தடவும்போது அது கைகளில் உள்ள பாக்டீரியா, வைரஸை அழித்து விடும்.




சானிடிசர்களில் ஐசோபிரைல் ஆல்கஹால் தான் பயன்படுத்தபடுகின்றது அவை கைகளில் தேய்க்கும் போது அந்த ஆல்கஹால் ஆனது முழுமையாக காற்றில் ஆவியாகிவிடும் 


ஏதேனும் மீதம் இருந்தால், சானிடைசரில் உள்ள மாய்ஸ்சரைசர் காரணமாக ஆல்கஹால் காற்றில் உலர்த்து செயல் இழந்துவிடும்


ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பு மருந்துகள் எரியக்கூடியவை தான் ஆனால் அது அந்த தீகாயம் படும் அளவிற்க்கு ஆபத்தானது  இல்லை. சிறிய அளவிலான தீ வரும் அவ்வளவுதான் அதுவும் மேஜிக் செய்யகூடிய அளவில் தான் இருக்கும்


ஆல்கஹால்  உங்கள் கைகளை சுத்தப்படுத்த நீங்கள் பயன்படுத்திய பிறகு தீ பிடிக்கும்  தீகாயம் ஆகும் என்பது உண்மையில்லை


பலரும் ஷேர் செய்யும் அந்த படம் தீக்காயங்களுக்கு ஆளானது தான் ஆனால் ஏதோ ஒரு தீ காயம் படத்தினை சானிடைசர் கொண்டு ஆனது என்பது பொய்யானது

மேலும் ஆதாரமாக அட்மின் மீடியா சானிடசரை கொண்டு சோதித்து பார்த்த வீடியோ 




https://www.youtube.com/watch?v=AiocbBTiPjg

 எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

1 Comments

  1. அஸ்ஸலாம்!
    செயல்முறைசெய்துகாட்டிமக்களின்
    பயத்தை போக்கியதற்கு நன்றி.
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete