கொரோனா வைரஸ் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை !!
அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 31-ந்தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்கள் மட்டும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை சில பள்ளிகள் நடத்துவதாக புகார்கள் வந்தன. அதன்படி, பள்ளிக்கல்வி துறை அரசு அறிவித்த விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த எந்த பள்ளிகளுக்கும் அனுமதி கிடையாது. அப்படி எதுவும் வகுப்புகளை நடத்தவும் கூடாது. அரசின் உத்தரவு மற்றும் எச்சரிக்கையை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ” என்று எச்சரிக்கைஅளித்துள்ளது
Tags: முக்கிய அறிவிப்பு