Breaking News

மதுபோதையில் வாகனம் ஓட்டினால் கைது: லைசென்ஸ் ரத்து : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அட்மின் மீடியா
0
மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் உடனே கைது செய்ய வேண்டும் னென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



சென்னை உயர்நீதிமன்றத்தில், சாலை விபத்தில் காயமடைந்தவர் கூடுதல் இழப்பீடு கேட்டு தாக்கல் செய்திருந்த மனு மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதிகள்,நீதிபதிகள், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர்களின் லைசென்ஸ்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தனர். 

மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்காணிக்கத் தனிப்பிரிவு போலீசார் அமைக்க வேண்டும் என்றும் அதன் அறிக்கையை மாதந்தோறும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Tags: முக்கிய அறிவிப்பு

Share this