Breaking News

ஈரான் நாட்டில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்லும் வீடியோ உண்மையா?

அட்மின் மீடியா
0
ஈரான் நாட்டில் கொரானா வைரஸால் வந்து இறந்த மக்களின் உடல்களை எடுத்து செல்லும் வீடியோ என ஒரு வீடியோவினை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள்

 அந்த வீடியோ உண்மையா என அட்மின் மீடியா வாசகர்கள் பலர் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

அந்த வீடியோ ஈரானில் நடந்தது இல்லை

அந்த வீடியோவில் உள்ள சம்பவம் கடந்த 2019 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்தது

மேலும் அந்த ஜனாசா அனைத்தும்  சவூதி அரேபியாவில் ஹஜ் யாத்திரையின் போது இறந்த 58 பேரின் உடல்கள் எடுத்து செல்லும் போது எடுக்க பட்ட வீடியோவாகும்

பொதுவாக மெக்காவிற்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பொழுது அங்கு கூடும் மக்கள் நெரிசலில் சிக்கியும் பல்வேறு காரணங்களால் இறந்த நபர்களை அங்கேயே அடக்கம் செய்து விடுவார்கள் அந்த வீடியோவை எடுத்து தவறான கருத்தை போட்டு பொய்யாக ஷேர் செய்கின்றார்கள்


அட்மின் மீடியா ஆதாரம்


https://www.youtube.com/watch?v=b0wNYZi2qUA

எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback