Breaking News

முந்தைய மின்கட்டணத்தை இந்த மாதத்திற்கும் செலுத்தலாம் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
முந்தைய மின்கட்டணத்தை இந்த மாதத்திற்கும் செலுத்தலாம் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக முந்தைய மின் கட்டணத்தையே இந்த மாதத்திற்கும் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரானா வைரஸ் காராணமாக மின் கட்டணம் அள்வீடு எடுக்காததால் முந்தைய மின்கட்டணத்தை இந்த மாதத்திற்கும் செலுத்தலாம் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. 

இந்த மாதத்திற்கான மின் கட்டணம் சில இடங்களில் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே மின் கணக்கீடு செய்யப்பட்டதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேரடியாக வந்து மின்கட்டணம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் ஆன்லைன் முறையைப் பயன்படுத்தவும் மின்சார வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.



மின் கணக்கீட்டாளர் கணக்கீடு எடுக்கப்பட்ட வீடுகளுக்கு புது கட்டணமும், கணக்கீடு எடுக்காதவர்களுக்கு போன மாத கட்டணமும் வசூலிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback