Breaking News

மக்கள் வெளியே வரகூடாது என 500 சிங்கங்களை திறந்துவிட்டார்களா ரஷ்யாவில்

அட்மின் மீடியா
0
மக்களை வீட்டுக்குள் தங்க வைப்பதற்காக ரஷ்யா சுமார் 500 சிங்கங்களை   திறந்து விட்டுள்ளார்


கொரானா உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் ரஷ்யாவிலும் பரவி வருகின்றது இந்த தொற்றுநோய்களின் போது மக்கள் வீட்டிற்குள் தங்கியிருப்பதை உறுதி செய்வதற்காக ரஷ்யன் 500 க்கும் மேற்பட்ட சிங்கங்களை தெருவில் அவிழ்த்து விடப்பட்டுள்ளது

என்று ஒரு செய்தியுடன் ஒரு போட்டோவுடன் சமுகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

2016 ஏப்ரல் 15-ம் தேதி தென் ஆப்பிரிக்கா நாட்டின் ஜோகன்னேஸ்பேர்க்கில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ளூர் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்று திரைப்பட காட்சிக்காக லயன்ஸ் பார்க்கில் இருந்து கொலம்பஸ் என்ற சிங்கத்தை கொண்டு வந்துள்ளனர். 

அப்போது எடுக்கபட்ட சிங்கத்தின் புகைப்படத்தை எடுத்து கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வெளியே வருவதை தடுக்க 500 சிங்கங்களை ரஷ்ய அதிபர் திறந்து விட்டதாக வதந்தியை பரப்பி வருகின்றனர்

அட்மின் மீடியா ஆதாரம் 1


அட்மின் மீடியா ஆதாரம் 2


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback