Breaking News

450 ஆண்டுகளுக்கு முன்பே கொரானா வைரஸ் வரும் என நாஸ்டர்டாமஸ் முன்பே கணித்தாரா ?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் கொரானாவை விட அதன் வதந்திகள் தான் அதனை விட வேகமாக பரவி சமூக வலைதளங்களை ஆட்டி படைக்கின்றது


 தற்போது பொதுமக்களுக்கு சமூக வலைதளங்களில் வலம் வரும் செய்திகள்  உண்மையா பொய்யா என்று யோசிப்பதே இல்லை  எது நமக்கு வருகின்றதோ அதனை உடனே நமக்கு இருக்கும் அனைவருக்கும் அனுப்பிடவேண்டும் அவ்வளவு தான் அப்படி அனுப்பவில்லை என்றால் அவர்களை என்ன சொல்வது.......

சரி விஷயத்திற்க்கு வரும் தற்போது   சமூக வலைதளங்களில் 450 ஆண்டுகளுக்கு முன்பே கொரானா வைரஸ் சீனாவில் இருந்து பரவி இத்தாலி நாட்டில் உயிர் பலிகளை வாங்கும் என நாஸ்டர்டாமஸ் கணித்து தனது நாவலில் குறிப்பிட்டுள்ளார் என ஒரு புகைபடத்துடன் அதனை ஷேர் செய்கின்றார்கள் அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படி என்றால் உண்மை என்ன


1500-ம் ஆண்டுகளில் பிரான்சில் வாழ்ந்த மைக்கல் டி நாஸ்டர்டாமஸ் ஒரு ஜோதிடர் ஆவார். பலர் தற்போது நிகழும் பல்வேறு நிகழ்வுகளை  நாஸ்டர்டாமஸ் முன்பே முன்னறிவிப்பைவிட்டுச் சென்றுள்ளார் எனக் கூறி வருகின்றனர்.ஆனால் இதுவரை அவர் பற்றி வந்த செய்திகள் எதுவும் உண்மை இல்லை

அது போல் இந்த செய்தியிம் பொய்யனாது ஆகும் அவரது நாவல் PDF வடிவில் கீழ் உள்ள லின்ங்கில் உள்ளது நாமும் அந்த புத்தகத்தை படித்தவரையில் எங்கும் கொரானா பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை 


அட்மின்  மீடியா ஆதாரம் 

https://holybooks-lichtenbergpress.netdna-ssl.com/wp-content/uploads/The-Complete-works-of-Nostradamus.pdf


எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback