Breaking News

பாகிஸ்தானுக்கு 45 கோடி நடிகர் ஷாருக்கான் கொடுத்தாரா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கலில் பலரும் நடிகர் ஷாருக்கான் 45 கோடி பணம் பாகிஸ்தானுக்கு அளித்துள்ளார் என பலரும் ஷேர் செய்கின்றார்கள்




அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்ப வேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன

இந்த வதந்தி கடந்த 3 வருடங்களாக சமூக வலைதளங்களில் வலம் வரும் பொய்யான அடிப்படை ஆதாரமற்ற செய்தியாகும்

இந்த செய்தி க்டந்த 2017 ம் ஆண்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது அதற்க்கு உண்மையை கண்டறிய அப்போதே இந்தியா டிவி என்ற தொலைகாட்சி நிறுவனம் ஓர் கள ஆய்வு நடத்தி செய்தி வெளியிட்டது

அந்த இந்தியா டிவியில் ஒளிபரப்பாகிய வீடியோவினை   1.56 நிமிடங்களிலிருந்து 2.40 நிமிடங்கள் வரை கட் செய்து  பொய்யாக ஷேர் செய்கின்றார்கள்.

அந்த முழு வீடியோவில் அவர்கள் சமூக வலைதலங்களில் ஷாருக்கான் பாகிஸ்தானுக்கு 45 கோடி கொடுத்தார் என்பது உண்மையில்லை என்பதை ஆதாரத்துடன் விளக்கி இருப்பார்கள்

அட்மின் மீடியா ஆதாரம் 

அந்த பாதி வீடியோவின் முழு வீடியோவை பார்க்க 


https://www.youtube.com/watch?time_continue=13&v=WU7lG5Xnn3k&feature=emb_title
அட்மின் மீடியா ஆதாரம் 

https://timesofindia.indiatimes.com/times-fact-check/news/fake-alert-no-shah-rukh-khan-did-not-donate-rs-45-crore-to-pakistan/articleshow/68062223.cms

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback