Breaking News

இவர் 300 ஆண்டுகள் தவம் இருந்த வள்ளியூர் சித்தரா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சிலநாட்களாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பல கட்டு கதைகளுடன் வலம் வருகின்றது இவர்தான் வள்ளியூர் சித்தர்  300 ஆண்டுகளாக பூமிக்கு அடியில் தவம் இருந்து வருகின்றார் என ஷேர் செய்து வருகின்றார்கள்




சமூக வலை தளங்களில் பரவும் வதந்தி பட்டியல்

வதந்தி 1. 

அவர் ஒர் மம்மி என்றும் ஒரு கல்லறையில் சத்தம் வந்ததால் திறந்து பார்த்தால் உயிருடன் உள்ளார் என்று ஒரு வதந்தி

வதந்தி  2

மற்றும் ஒரு வதந்தி என்னவென்றால்

அவர் ஒரு வேட்டைகாரார் என்றும் காட்டில் கரடி தாக்கியதில் அடிபட்டி ஒரு மாதமாக காட்டில் காப்பாற்ற ஆள் இல்லாமல் இருந்தார் என்றும் மற்றொறு வேட்டைகாரர்கள் காப்பாற்றி அவரை மருத்துவமனையில்  சேர்த்துள்ளார்கள் என்றும் பரவி வருகின்றது

 வதந்தி 3

மேலும் அவர் ஓர் இஸ்லாமியர் என்றும் அவரை அடக்கம் செய்து 2 நாட்களுக்கு பிறகு கபுரில் சத்தம் வரவே மீண்டும் தோண்டி எடுத்து பார்த்ததில் அவர் உயிருடன் உள்ளார் என்று ஓர் வதந்தி


வதந்தி 4  

வள்ளியூர் சித்தர் 300 ஆண்டுகள் பூமிக்கு அடியில் தவம் இருந்து வருகின்றார்



மேலே உள்ள அனைத்தும் பொய்யானது ஆகும்

 
அப்படியானால் நடந்தது என்ன உண்மை என்ன?

இந்த செய்தியை அட்மின் மீடியா பல முயற்சிகளுடன் ஆய்வு செய்தது.

அந்த புகைபடத்தில் இருப்பவர் ரஷ்யாவை சேர்ந்தவர் .அவர் பெயர்  அலெக்ஸாண்டர்  ஆவார். அவருக்கு  ஏற்பட்டு இருப்பது ஒரு வித தோல் வியாதியாகும் தடை செய்யப்ட்ட போதை மருந்து க்ரோடிலை அதிகம் உட்கொண்டதால் அவருக்கு ஏற்பட்ட நிலை ஆகும்

இந்த வீடியோ தமிழில் பரவுவதற்கு முன்னதாகவே ரஷ்யாவில் சமூக வலைதளங்களில்  அதிவேகமாக பரவிக் கொண்டிருந்தது. 

அதில் தான் இந்த மனிதர் அலெக்சாண்டர் எனவும், வேட்டையாட சென்ற இடத்தில் கரடியால் வேட்டையாடப்பட்டு, முதுகு எலும்பு உடைந்து குகைக்குள் இருந்ததாகவும், அதை மற்ற வேட்டையாட சென்றவர்கள் நாய்கள் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்ததாகவும் பரவிக் கொண்டிருந்தது. 

இதை தமிழிலும் சில ஊடகங்களும் மொழி பெயர்த்து பரவியதை நமது உள்ளூர் பத்திரிக்கைகளில் பார்த்தோம். 

இந்த செய்திக்கு எந்த வித முகாந்திரமும் இல்லை என்பது தான் உண்மை. 

இந்த செய்தியை பரப்பியவர்களின் பட்டியலை ரஷ்ய பத்திரிக்கை ஆய்வு செய்ததில் இந்த செய்தி மிருகங்களை வேட்டையாடுபவர்களின் நண்பர்கள் குழுவில் முதலாவதாக பரப்பப்பட்டது என்பதும், இதனை முதலில் யார் பரப்பியது என்ற கேள்விக்கு எனது நண்பனின் நண்பன் அவனது மூலமாக கிடைத்தது என்று பட்டியல் நீண்டு கொண்டே போனது என்பதை ஆய்வின் முடிவில் இது வேடிக்கையாக பரப்பப்பட்டது என தெரியவந்தது.

மேலும் இதன் பின்னனி என்னவாக இருக்க முடியும் என்ற நிலையில், அந்த வீடியோவில் இருக்கும் மனிதரின் உடலை ஆய்வு செய்ததில் Krokodil என்ற ஒரு வகையான தோல்வியாதி என்ற முடிவுக்கு வர முடிகிறது.

அந்த புகைபடத்தில் இருப்பவருக்கு ஏற்பட்டு இருப்பது ஒரு வித தோல்வியாதியாகும். இந்த நோய் தாக்கியவரின் உடல் Zombie போன்று மிகவும் கொடுரமாக மாறி அவரின் உடல் தசைகள் அழுகிய நிலையில் இருக்கும். 

இறைவன் இது போன்ற நோயில் இருந்து அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டும்.


ஆதாரம் :1




ஆதாரம் : 2




ஆதாரம் :3




ஆதாரம்: 4



 ஆதாரம்: 5

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback