Breaking News

சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் 31 ம் தேதி வரை ஊரடங்கு

அட்மின் மீடியா
0
கொரோனா எதிரொலி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் 3 மாவட்டங்களிலும் முடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் இந்தியாவையும் தற்போது தாக்க தொடங்கி இருக்கிறது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது.

இந்த நிலையில், தமிழகத்தில் சென்னை காஞ்சிபுரம் ஈரோடு மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த 3 மாவட்டங்களிலும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நிறுத்தவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 மாவட்டங்களிலும் அத்தியாவசிய தேவைகள் தவிர பிற அனைத்து சேவைகளும் முடக்கப்படுகின்றன.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback