22 ம் தேதி பஸ்கள் இயங்காது, தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்தநிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அவர்கள் நேற்று தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.
அதில், மக்கள் தங்களை தனிமைப்படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். எனவே 22-ந் தேதி யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
எனவே 22-ம்தேதி சுய ஊரடங்கை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
22-ம் தேதி அரசு போக்குவரத்து கழகங்களின் பேருந்துகள் எதுவும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஓடாது.
மெட்ரோ ரெயில்களும் வரும் 22-ம் தேதி இயங்காது.
மிகவும் அத்தியாவசிய பணிகளைத்தவிர மற்ற பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
வதந்திகளை நம்ப வேண்டாம், பதற்றத்துடன் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது.
நாளை முதல் 31ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள வெளிமாநில எல்லைகள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா எல்லைகள் மூடப்படுகின்றது என அறிவிப்பு
Tags: முக்கிய அறிவிப்பு