Breaking News

தாய்,தந்தையற்ற குழந்தைகளுக்கு தமிழக அரசு மாதந்தோறும் ரூ.2000 நிதி உதவி அளிக்கின்றதா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் அப்பா, அம்மா இல்லாத மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு மாதந்தோறும் ரூ.2000 நிதி உதவி அளிக்கின்றது தாய்,தந்தையற்ற  குழந்தைகளுக்கு தமிழக அரசு மாதந்தோறும் ரூ.2000 நிதி உதவி அளிக்கின்றதா? என ஒரு செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள் 


அந்த செய்தி உண்மையா? அந்த செய்தியின் உண்மை என்றால் எப்படி விண்ணப்பிப்பது,எங்கு விண்ணப்பிப்பது , தாய்,தந்தையற்ற  குழந்தைகளுக்கு உதவும் என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


ஆம் அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

அந்த செய்தியின் கீழ் கிராம நிர்வாக அலுவலர் என உள்ளதால் பலரும் நம்பி ஷேர் செய்கின்றார்கள் ஆனால் அந்த செய்தியினை எந்த கிராம நிர்வாக அலுவலர் வெளியிட்டார் என்று யாருக்கும் தெரியாது

சரி அதுபோன்ற ஓர் அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளதா என தேடியதில் அது போன்று ஒரு அறிவிப்பை தமிழக அரசு அறிவிக்கவில்லை என உறுதியாக தெரிந்தது


எனசே பொய்யான செய்தியினை ஷேர் செய்து மக்களை குழப்பாதீர்கள் என அட்மின் மீடியா உங்களை கேட்டுகொள்கின்றது

Tags: மறுப்பு செய்தி

Share this