Breaking News

டெல்லி கலவர காட்சியை ஒளிபரப்பிய 2 மலையாள டிவி சேனலுக்கு 2 நாட்கள் தடை

அட்மின் மீடியா
0
ஏசியாநெட் , நியூஸ் ஒன், மலையாள டிவி சேனல்கள் , அடுத்த, 48 மணி நேரம் ஒளிபரப்புவதற்கு மத்திய செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் இன்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மதக் கலவரம் தொடர்பான செய்திகளை ஒளிபரப்பும் போது மிகுந்த எச்சரிக்கையும் அவசியம்  வேண்டும் என்று ஏற்கனவே செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் இந்தியாவில் உள்ள அனைத்து மீடியாக்களுக்கும்
எச்சரித்திருந்தது.

இந்தநிலையில் எச்சரிக்கையை மீறி, டெல்லி கலவர காட்சிகளை ஏசியாநெட் மற்றும் மீடியா ஒன் டிவி ஆகிய இரு சேனல்களும் செய்தி ஒளிபரப்பியதாக குற்றஞ்சாட்டி அடுத்த 48 மணி நேரத்துக்கு, 2 சேனல்களையும் ஒளிபரப்புவதற்கு, செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் இன்று தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback