அமைதியாக முடிந்த சட்டமன்ற முற்றுகை போராட்டம் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்ப்பு
அட்மின் மீடியா
0
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை கலைவாணர் அரங்கில் இருந்து இஸ்லாமிய அமைப்புகள் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் லட்சகணக்கணக்கான இஸ்லாமியர்கள், மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.
கலைவாணர் அரங்கில் இருந்து சேப்பாக்கம் வரை பேரணியாக சென்று நிலையில் நிறைவு பெற்றுள்ளது.
பேரணியில் குடும்பம் குடும்பம்மாக பங்கேற்ற இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறக்கோரி முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக நடப்பு சட்டசபை கூட்டதொடரிலேயே குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்
மேலும் பேரணியாக சென்று சட்டமன்றத்தை முற்றுகையிட திட்டமிட்டிருந்த நிலையில், சேப்பாக்கத்தில் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.
Tags: முக்கிய அறிவிப்பு