Breaking News

டெல்லி ஷாஹீன் பாக் போராட்டகாரர்கள் அமித்ஷா வீடு நோக்கி பேரணி

அட்மின் மீடியா
0
டெல்லி ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டை நோக்கி பேரணி செல்ல முடிவு செய்துள்ளனர்.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களையும் தாண்டி பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாளை மதியம் 2 மணியளவில்  ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டை நோக்கி பேரணி செல்ல முடிவு செய்துள்ளனர். 

“குடியுரிமை சட்டம் குறித்து விவாதிக்க யார் வேண்டுமானாலும் வரலாம்” என்று அமித் ஷா தெரிவித்திருந்தார். இதனை அடுத்து அமித் ஷாவின் வேண்டுகோளின் படியே ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் அமித் ஷா வீட்டை நோக்கி பேரணி செல்ல முடிவு செய்துள்ளதாக, ஷாஹின் பாக் போராட்டக்களத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.



Source ;https://news.abplive.com/videos/news/india-shaheen-bagh-protesters-to-meet-amit-shah-on-sunday-1160048

Share this