3 வது நாளாக தொடரும் போராட்டம்:
அட்மின் மீடியா
0
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடக்கும் சிஏஏ எதிர்ப்பு ஷாகீன் பாக் போராட்டம் போல் பெரிய அதிர்வலைகளை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இரவும் தொடர்ச்சியாக தர்ணா நடத்தி வருகிறார்கள்.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சென்னை, வண்ணாரப்பேட்டையில் 14 ம் தேதி நடந்த போராட்டத்தின்போது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, அன்று தமிழகம் முழுக்க இஸ்லாமியர்கள் இரவோடு இரவாக போராட்டத்தில் குதித்தனர்.
அதனை அடுத்து நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், அவர்கள் முஸ்லீம் அமைப்பு தலைவர்களை சந்தித்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்ய்பப்டடனர்.
இந்த நிலையில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்து வருகின்றன
மண்ணடியில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதேபோல வண்ணாரப்பேட்டை பகுதியில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.
இதேபோல மதுரை ஜின்னா திடல் பகுதியிலும் இரவு போராட்டம் தொடர்கிறது.
சட்டசபையில் CAA, NRC, க்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வண்ணாரப்பேட்டையில் போராடும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.